Arulmigu Karbagambal Amman and Sri Kabaliswarar Temple-Mylapore
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் - மயிலாப்பூர்





இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கபாலிஸ்வரர்

இறைவி : அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் அம்மன்

தல விருட்சம் : புண்ணை மரம்

தீர்த்தம் : கபாலிதீர்த்தம்



God : Arulmigu Sri Kabalishwarar

Godess : Arulmigu Sri Karpagambal Amman

Tree : Punnai Tree

Theertham : Kabali Theertham

Mylapore Arulmigu Kabaliswarar Temple is Famous Shiva Temple In Tamilnadu India

Arulmigu Kapaleeswarar Temple, Mylapore



mylapore Kapaleeswarar Temple

      Kapaleeswarar temple is a hindu temple dedicated to God Shiva located in Mylapore,Chennai City in the state of Tamilnadu. Mylapore Kapaleeswarar Shiva Temple is one of the most famous shiva temple in Tamil Nadu, In Mylapore Temple God Name is Shree Kapaleeswarar and Amman name is Shree Karpagambaal Amman ,God Kapaleeswarar is a swayambu in this temple. Mylapore Kapaleeswarar Temple is one of the 276 Thevaram Padal Petra Sthalams and 24th Shiva Sthalam in Thondai Nadu. There is the place Goddess Parvathy took the form of peacock and worshiped Lord kabaliswarar Shiva in Mylapore. the lord shiva here is known as Sri Punnaivana Nathar (“Punnai vanam” means a forest of Punnai trees). The Goddess Parvathi in a peacock form can be seen in this shrine.

Mayilai or Mylapore is derived from the legend that the Goddess Parvathi worshipped Lord Shiva in the form of a peacock. There are seven famous Shiva temples in Mylapore — Kapaleeswarar, Vellishwarar, Karneeshwarar, Virupakshishwarar, Valishwarar, Malleeshwarar and Theerthapaleeswarar. The Kapaleeshwarar Temple is Chennai's most active and impressive temple.




அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்



      இறைவி மயிலாக வந்து இறைவனை பூசித்தமையால் இப்பதி மயிலாப்பு ,மயிலாப்பூர் என்ற பெயர்களை கொண்டது. அவற்றின் மரூஉவே மயிலை என்பதாகும். கபாலீஸ்வரர் வீற்றிருந்ததால் கபாலீச்சரம் என்ற பெயரும் பெற்றது.புண்ணை இத்தலத்து விருட்சமாதலால் புன்னைவனம் என்பதும்,வேதங்கள் பூசித்தமையால் வேதபுரி என்பதும் சுக்கிரன் பூசித்தமையால் சுக்கிரபுரி என்பதும் இத்தலத்துக்குரிய வேறு பெயர்களாகும்.இத்தலத்தில் திருஞானசம்மந்தர் அருளிய அங்கம் பூம்பாவை ஒவ்வொரு பாடலிலும் மயிலையில் மாதந்தோறும் புரட்டாசி முதல் ஆணி வரை நடைபெறும் திருவிழாக்களை கூறி இந்த விழாக்களை காணாமல் போதியோ பூம்பாவாய் என அருள செய்கின்றார்.

       காசி, தில்லை, திருவாரூர், முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம்.சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்

Mylapore Temple Opening Time
திருக்கோவில் திறக்கும் நேரம்



காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

Mylapore Temple Pooja Time திருக்கோவில் பூஜை நேரம்




5.00 a.m.- கோ பூஜை

6.00 a.m.- வைகறை பூஜை

8.00 a.m.- கால சாந்தி பூஜை

12.00 p.m.- உச்சி கால பூஜை

9.00 p.m.- அர்தசாம பூஜை

Temple History


திருமயிலைத் தலவரலாறு 

  Thirumaylai Kapaleeswarar Thalavaralaru



பார்வதியின் மயிலுருவம் நீங்கியது


ஒரு காலத்தில் பரமசிவன் பார்வதி சமேதராய் கைலாய கிரியில் ஏழுந்தருளி இருக்கையில் அவரை தரிசிக்க தேவர்கள் பலரும் வந்தனர். அப்பொழுது அவரவர்கள் கூறிய குறைகளை கேட்டு அவரர்களுக்கு தகுந்த விஷயங்களை புத்திமதிகளாக கூறி அனுப்பி விட்டார்.அவர்கள் போனதும் பரமசிவன் பார்வதியை நோக்கி உனக்கு விபூதி பஞ்சாக்ஷரம் இவைகளின் மகிமைகளை எடுத்து கூறுகிறேன் என்று கூறியவாறு செய்ய தொடங்கினார். "விபூதி" அணிபவர்களுக்கு மிகுந்த சிறப்பை உண்டாக்கி அவர்கள் பாபத்தை நீக்கும்.ஒரு ஊரில் ஒரு கொடிய பிராமணன் இருந்தான். அவனிடம் எல்லா மகா பாதங்களும் குடிகொண்டிருந்தன.அவன் சேரி வழியாக போகையில் அங்கு பெரு பெண்ணை கண்டு அவளிடம் சல்லாபங்களை செய்ய தொடங்க அவள் நாயகன் இவனை ஒரே வெட்டாக வெட்டி இவன் தேகத்தை சேரிக்கு வெளியில் இருந்த புதரில் எரிந்து விட்டான். அந்த பிணத்தை ஒரு நாய் தன்னை வந்து அதன் பேரில் ஏறிக்கொண்டது. இந்த நாய் மசானத்தில் அலைந்து கொண்டிருந்ததால் இதன் கால்களில் சாம்பல் படிந்தியிருந்தன. இந்த சாம்பல் அந்த பிணத்தின் மேல் பட்டதும் அவன் திவ்ய லோகம் பெற்றான்.

"நமச்சிவாயம் " என்பது என் தேகமே அதுதான் இப்பிரபஞ்ச ரூபமாக இருப்பது.அதை ஓம் என்ற ப்ராணாவதோடு உச்சரித்தால் ஒருவன் எளிதில் பரமபதம் பெறுவான் என்றார்.இவ்வாறு பகவான் கூறுகையில், அருகாமையில் வந்திருந்த ஒரு மயிலின் மேல் தேவியினது கருத்து செல்ல பகவான் செய்த உபதேசம் அம்பிகையின் காதில் ஏறவில்லை.மறுபடி கூற வேண்டும் என்று பகவானை பிரார்த்திக்க அவர் இந்த நல்ல சமயத்தில் உன்மனம் மயில் மையமாக இருந்ததால் நீ மயிலாக கடவாய் என்று சபித்தார்.சாப விமோசனத்தை பற்றி விசாரித்த காலத்தில் உலகத்தில் பாலாற்றுக்கு வடபாகத்தில் "கபாலிபுரம்"என்ற பட்டணம் உண்டு.அதில் நாம் திவ்ய லிங்கமாக எழுந்தருளி இருக்கிறோம். அங்கு சென்று எம்மை பூஜித்து சாபம் நீங்குவாய் என்ற உத்தரவு பிறந்தது.










இதை கேட்டதும் மிகுந்த விநயத்துடன் சாபத்தையேற்று பூமியை சுற்றி வலம் வந்து திவ்ய சேத்திரங்களில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பரமசிவத்தை தரிசித்துக்கொண்டு முடிவில் கபாலிபுரம் வந்தாள். உடனே அவளுக்கு மயில் உருவம் வர இங்குள்ள கடலில் ஸ்தானம் செய்து இவ்வூர் புஷ்கரணி வந்து அதில் சகல திவ்ய தீர்த்தங்களையும் வருவித்து ஸ்தானம் செய்தாள்.பின்னர் புஷ்பங்களை சேகரித்துக்கொண்டு கோயிலுள் புகுந்து புண்ணை மரத்தடியிலிருந்து கபாலி நாதரை விதிப்படி பூஜித்தாள்.பூஜையின் முடிவில் பகவான் வ்ருஷபாரூடராக ப்ரத்யக்ஷமாகி அம்பிகையின் மயிலுருவத்தை நீக்கி அவளை தம்முடன் சேர்த்துக்கொண்டார்.

அப்பொழுது அம்பிகையின் வேண்டுகோளின்படி கபாலிபுரத்திற்கு திருமயிலை என்ற பெயருண்டாகும் படியாகவும், இதற்கு பாபம் நீக்கும் திறன் முதலிய திவ்ய சக்தி வரும் படியாகவும் பகவான் அனுகிரகித்தார்.அம்பிகை மயிலாக இருக்கையில் பகவானை பூஜித்தது,இந்த ஊரில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தின் முதல் நாள் இரவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தலத்திற்குரிய தீர்த்தங்கள்


1 .சக்தி கங்கை என்னும் கபாலி தீர்த்தம்.
2 .வேத தீர்த்தம்.
3 .சுக்கிர தீர்த்தம்.
4 .ராம தீர்த்தம்.
5 .வாலி தீர்த்தம்.
6 .கந்த தீர்த்தம்.
7 .திரைகடல் தீர்த்தம்.

மயிலாப்பூர் திருக்கோவில் பற்றிய புத்தகங்கள்

1 .திருமயிலை யகம அந்தாதி
2 .திருமயிலை கலம்பகம்
3 .திருமயிலை வெண்பாமாலை
4 .திருமயிலை உவமை வெண்பா.
5 .மயிலை குறவஞ்சி
6 .கற்பகவல்லி மாலை
7 .கபாலிஸ்வரர் பஞ்சரத்தினம்
8 .திருமயிலை சிங்கார வேலர் பிள்ளை தமிழ்'
9 சிங்கார வேலர் கோவை
10 .பூம்பாவையார் விலாசம்








வாயிலார் நாயனார் சரித்திரம்  

 
வாயிலார் நாயனார் திருமயிலையில் வேளாளர் குலத்த்தில் பிறந்தவர். அவர் வாழ்கை தொழில் பகவத் ஆராதனை மாத்திரமாயிருந்த படியால் அவர் வாழ்நாளில் அற்புத விஷயங்கள் ஒன்றும் ஸ்தம்பிக்கவில்லை. இந்த தொழில் பெரும்பாலாருக்கும் மிக சாரமற்றதாக தோன்றும் ஆயினும் அது நாயனார் ஆயுள் முழுவதும் கவர்ந்து அவருக்கு பேரானந்தத்தை அளித்துக்கொண்டு வந்தது.வாயிலரது பூஜை மிக அற்புதமானது. ஊரில் உள்ள கோயிலுக்கு அவர் போனவரேயல்லர். அங்கு நடக்கும் விஷயங்கள் அவர் மனோநிலைக்கு தாழ்ந்தவைகளாகவே அவருக்கு பட்ட படியால் அவர் ஓர் பெரிய கோயில் கட்டினார். அதைப்போன்ற சிறந்த கோயில் இவுலகில் எங்கும் இல்லை. அதற்கு அநேகம் பொற்கோபுரங்களை அமைத்தார். வெள்ளிச்சுவர், ரத்ன ஸ்தம்பங்கள் அங்கு அமைத்தார்.முதலியவைகளோடு கூடிய விஸ்தாரமான மண்டபங்களை அமைத்தார்.பஞ்சலோகங்களால் செய்த ஐந்து பிரகாரங்களையும் இயற்றி அவைகளுள் வெளிச்சுவரை இரும்பாலும்,உள்சுவரை பொன்னாலும் அமைத்தார்.
இந்த கோயிலின் மத்தியில் தான் கைலாயத்திற்கு சமமாகிய மூலஸ்தானத்தை அமைத்தார். இதில் பகவத் ஸ்வரூபமான மூல லிங்கம் அமைக்கப்பட்டு, விலை உயர்ந்த ஆபரணங்கள், நல்லபரிமளம் வீசும் புஷ்பங்கள் ஆகியவை ஆனந்தமாக அலங்கரிக்கப் பெற்றிருந்தது. இந்த லிங்கத்தின் இரன்டு புறத்திலும் இரண்டு கல்பக விருக்ஷங்கள் அமைக்க பட அவைகள் தமது திவ்ய கந்தகத்தை கோயிலெங்கும் பரவ செய்தன.இவளவு சிறந்த கோயிலை கட்ட போதுமான திரவியம் வாயிலருக்கு எங்கு கிடைத்தது ? அவர் எங்கு கட்டினார் என்ற சங்கை ஏல்லோருக்கும் பிறக்கும். அவர் திரவியத்தால் இந்த கோயிலை கட்டவில்லை. அவர் கற்பனாசக்தியே இதற்கு காரணம். இவ்வற்புத கோயிலை அவர் தமது மனதிலே கட்டிக்கொண்டார். தமது சாப்பாடு, தூக்கம், தொழில் முதலியவைகளைக்கூட மறந்து இராப்பகல் ஒழிவு இன்றி இப்பகவானுக்கு பூஜைகளை நடத்துவார்.அவர் மௌனமான மானஸ பூஜையின் சிறப்பு காலக்கிரமத்தில் பலர் அறிய வெளிவர அவர் விதேக முக்தி பெற்றதும் சமாதி செய்யப்பெற்ற நாயன்மார்களுடன் ஒருவராக மதிக்கப்பெற்றார் என்று புராணங்கள் கூறும்.இப்பொழுது திருமயிலை அம்பாள் சன்னதிக்கு எதிரில் பிரகாரத்தில் வாயிலா நாயனார் கோயில் இருப்பதை யாவரும் காணலாம்.




ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தர்

       சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவஸ்தலம் சீர்காழி. அங்கே வேத வேள்வித்துறை நிரம்பிய பெரியார் சிவபாத இருதயர். அவருடைய மனைவியார் பகவதியார். இருவருக்கும் இறைவன் திருவருளே உருவாக ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இறைவன் அருளால் இரண்டு ஆண்டுகள் நிறைந்து மூன்றாம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது.
      
      ஒரு நாள் சிவபாத இருதயர் காலையில் நீராடும் பொருட்டுக் கோயிலைச் சார்ந்த பிரம தீர்த்தத்தை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய குழந்தை தானும் வருவேனென்று பிடிவாதம் செய்து அழுதான். வேறு வழி இன்றி குழந்தையையும் அழைத்துச்சென்றார். திருக்குளத்தின் கரையிலே குழந்தையய் அமரவைத்துவிட்டு குளத்தினுள் மூழ்கி நீராடச்சென்றார் சிவபாத இருதயர். மந்தர விதிப்படியே நீராடினார்."அகமருஷண ஸ்நானம்" என்பது ஒரு வகை. நீருக்குள்ளே மூழ்கியபடியே சில மந்திரங்களை சொல்லவேண்டும். அவர் அப்படி மூழ்கியிருக்கையில், கரையில் இருந்த குழந்தை தம் தந்தையாரைக் காணாமல் கோயிலின் சிகரத்தைப் பார்த்து, "அம்மா! அப்பா!" என்று அழுதான். அப்போது சீர்காழியில் கட்டுமலியின்மேல் கோயில் கொண்டிருக்கும் தோணியப்பர் உமாதேவியாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளி வந்தார். உமாதேவியார் பாலை ஒரு கிண்ணத்திற் கறந்து அதில் ஞானத்தைக் குழைத்து அழுதபிள்ளைக்கு ஊட்டினார். பின்பு இருவரும் மறைந்தனர்.

      அம்மையின் திரு முலைப்பால் உண்டமையால் அந்தப் பிள்ளைக்குச் "சிவஞான உணர்ச்சி உண்டாயிற்று. அவர் திருஞான சம்பந்தர் என்ற திருநாமம் பெற்றார்.

      குளத்தில் நீராடிவிட்டுக் கரைக்கு வந்த சிவபாத இருதயர் தம்முடைய குழந்தையய்ப் பார்த்தார். வாயில் பால் வழிய நிற்பதைக் கண்டு, "யார் உனக்குப் பால் தந்தார்"? என்று அதட்டிக் கேட்டார். ஞானசம்பந்தர் ஒரு விரலால் தோணியப்பரைச் சுட்டிக் காட்டி, "தோடுடைய செவியன்" என்ற பாடலைப் பாடி, "இவரே!" என்று காட்டினார். அந்தப் பாடலே திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய முதற்ப் பாடல். பிறகு பத்துப் பாடல்களாகப் பாடி அந்தப் பதிகத்தை நிறைவேற்றினார். தேவாரத்தின் முதல் பதிகம் அதுவே.    மூன்று ஆண்டுக் குழந்தை ஞான சம்பந்தர். அந்தக் குழந்தை மாசு மறுவற்ற தூய உள்ளம் படைத்தவர். இறைவனுடைய திருக்கோலத்தைப் பாடுகிறார். 

அந்தத் திருக்கோலத்தில் வேறு நிறமுள்ள பொருள்கள் பல இருந்தும் அவற்றில் இந்தக் குழந்தையின் உள்ளம் செல்லவில்லை. இறைவன் திருக் குழுத்தில் நீலநஞ்சம் இருக்கிறது; அவன் திருமுடியில் சிவந்த சடை இருக்கிறது; அங்கே பொன்னிறக் கொன்றையும் உண்டு. இப்படிப் பல நிறமுள்ள பொருள்கல் இரைவனிடம் இருந்தாலும் தூய ண்பொருள்களிலேதான் அந்தக் குழந்தையின் கண் ஓடியது.

      உலகில் உள்ள குழந்தைகளுக்கு வன்ண வண்ணமான விளையாட்டுப் பண்டங்களை வாங்கித் தருவார்கள். கன்ணைப் பறிக்கும் வண்ணப் படங்கள் உள்ளபுத்தகங்களை அளிப்பார்கள். உலகியலில் பல வகையான விளையாட்டு சாமான்களை வாங்கி குழந்தையய் மகிழ்விப்பார்கள். குழந்தைகள் பலவித வண்ணக்குவியலைக் கண்டு மகிழ்கின்றன. ஆனால் இந்தக் குழந்தையோ ஞானசம்பந்தக் குழந்தை. ஞானம் தூயது; அதற்கு வெண்மை நிறந்தான் அடையாளம். குணங்கள் பலவானாலும் அவற்றை மூன்றுக்குள்ளே அடக்குவார்கள். சத்துவம், ராஜசம், தாமசம் என்பவை அவை. இவற்றிற்கு முறையே வெண்மை, செம்மை, கருமை என்பவற்றை நிறமாகக் கூறுவார்கள். எம்பெருமாட்டி ஊட்டிய ஞானப்பால் வெண்மை நிறம் பெற்றது. அவர் கண்கள் இறைவன் திருக்கோலத்தில் சத்துவ குணத்தைக் காட்டும் ண்மையய்யுடைய பொருள்களையெ கண்டு மகிழ்ந்தன.

      தந்தையார் "யார் பால் கொடுத்தார்?" என்று கேட்டார். அதற்குக் குழந்தை  நேர்முகமாகப் பதில் சொல்லவில்லை. யாரோ அயலார், அந்ததௌறவின் முறையும் இல்லாதார், தம் குழந்தைக்குப் பால் கொடுத்துச் சென்றாரோ என்ற ஐயத்தால் சிவபாத இருதயர் கேட்டார். சம்பந்தப் பெருமான், "இறைவன் கட்டளையிட இறைவி பால் கொடுத்தாள்" என்று சொல்லியிருக்கலாம். அவர் அப்படிச் சொல்லவில்லை. "இத்தகையதிருக்கோலத்தில் வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதோ இந்தப் பிரமபுரமாகிய சீர்காழியில் உள்ள பெருமான்" என்று சொல்கிறார். பாலைபற்றிய பேச்சே பாட்டில் வரவில்லை.

      சம்பந்தப் பெருமான் வெறும் பாலை உண்ணவில்லை. மற்றவர்கள் தரும் பால் நாவுக்கு இனிமை தரும்; அப்பால் வயிற்றிற்குள்ளே சென்று பசியைப் போக்கும். அது உடம்புக்குப் பயனைத் தருவது. ஆனால், உமாதேவியார் தந்த பால் சிவஞானத்த்தை அருளியது. அது உள்ளத்தைக் கவர்ந்து அதன் வழியே உயிருக்கு இன்பந் தருவது. மற்றவர்களெல்லாம் பலபல நெறியிலே சென்று பலபல செயலும் பெற்றுப் பாசத்துக்கு உட்படுகிறவர்கள். ஞானசம்பந்தப் பெருமானோ, 'ஒரு நெறியில் வரும் ஞானத்தால், அரு நெறியிலே மனம் வைத்து உணர்ந்து, இறைவன் திருநெறித் தமிழ் ஒன்றையே உரைத்து, அவனைப் பணியும் தொண்டு ஒன்றையே செய்யப் புகுந்தவர்.

      ஆகவே, "எனக்குப் பால் கொடுத்ததைத் தானே நீங்கள் கேட்கிறீர்கள்? அவன் என் உள்ளத்தையே கவர்ந்துவிட்டான். உலகில் யார் யாரையோ என்னியிருந்த பழைய உள்ளம் எனக்கு இப்போது இல்லை; தானே நினைத்துத் தானே இன்ப துன்ப உணர்ச்சி பெறும் உள்ளத்தை அவன் கவர்ந்து கொண்டான். இனி அந்த உள்ளம் என்னிடம் இல்லை. அவனிடம் இருக்கிறது; அவன் வசப்பட்டிருக்கிறது. அவன் அதனை எப்படியெல்லாம் இயக்குகிறானோ அப்படியெல்லாம் இயங்கும். நினிக்கச் செய்தால் நினைக்கும்; மறக்கச் செய்தால் மறக்கும். இனி ஒரு கணமும் அவனை விட்டுப் பிரியாது" என்பதை யெல்லாம் உள்ளடக்கி, 'என் உள்ளம் கவர் கள்வன், பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்" என்கிறார்.





1 கருத்து: