கபாலிஸ்வரர் கோயில்

இறைவர்: கபாலிஸ்வரர்

இறைவி: கற்பகாம்பாள்

தல மரம்: புண்ணை மரம்

தீர்த்தம்: கபாலிதீர்த்தம்

திருக்கோவில் திறக்கும் நேரம்

காலை 5AM முதல் 12:30PM வரை, மாலை 4PM முதல் இரவு 9.30PM வரை திறந்திருக்கும்.

பூஜை நேரம்

5.00 a.m.- கோ பூஜை

6.00 a.m.- வைகறை பூஜை

8.00 a.m.- கால சாந்தி பூஜை

12.00 p.m.- உச்சி கால பூஜை

9.00 p.m.- அர்தசாம பூஜை

தல சிறப்பு

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரத்தலம் ஆகும். இத்தல இறைவன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு..

ருள்மிகு கற்பகாம்பாள் உடனுரை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் -மயிலாப்பூர்


றைவி மயிலாக வந்து இறைவனை பூசித்தமையால் இப்பதி மயிலாப்பு ,மயிலாப்பூர் என்ற பெயர்களை கொண்டது. அவற்றின் மரூஉவே மயிலை என்பதாகும். கபாலீஸ்வரர் வீற்றிருந்ததால் கபாலீச்சரம் என்ற பெயரும் பெற்றது.புண்ணை இத்தலத்து விருட்சமாதலால் புன்னைவனம் என்பதும்,வேதங்கள் பூசித்தமையால் வேதபுரி என்பதும் சுக்கிரன் பூசித்தமையால் சுக்கிரபுரி என்பதும் இத்தலத்துக்குரிய வேறு பெயர்களாகும்.இத்தலத்தில் திருஞானசம்மந்தர் அருளிய அங்கம் பூம்பாவை ஒவ்வொரு பாடலிலும் மயிலையில் மாதந்தோறும் புரட்டாசி முதல் ஆணி வரை நடைபெறும் திருவிழாக்களை கூறி இந்த விழாக்களை காணாமல் போதியோ பூம்பாவாய் என அருள செய்கின்றார்.

உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம்.சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்